கை நழுவும் சொர்க்கம்

கை நழுவும் சொர்க்கம், எஸ். செல்வசுந்தரி, இனிய நந்தவனம் பதிப்பகம்.

தவறுகளை துரத்தி அடிக்கும் போர்க்கருவியாக படைப்பாளிகளுக்கு எப்போதுமே, எழுத்துகள் இருக்கின்றன. அவை கவிதையாகவும், புதினமாகவும், சிறுகதையாகவும் வெளிப்படுகின்றன. ‘செல்வசுந்தரி’யும் அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். அதற்கு சாட்சி, அவரின் கைநழுவும் சொர்க்கம் சிறுகதைத் தொகுப்பு.

புதினம் எழுதுவது எளிது; சிறுகதைகள் எழுதுவது தான், கடினம் என்றொரு கருத்து உண்டு. செல்வசுந்தரி, தன் சிறுகதை நூல் தொகுப்பின் வாயிலாக அந்த கடினமானப் பணியை செவ்வனே செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
‘கை நழுவும் சொர்க்கம்’ என்னும் அவரின் சிறுகதை நூலில் மொத்தம், 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

முதன்முதலாக, வாரமலரில் இது உங்கள் இடத்துக்கு கடிதம் எழுதத் தொடங்கிய இவரின் எழுத்து, ‘தினமலர்’ வாரமலரில் தான், சிறுகதையாகவும் மலர்ந்திருக்கிறது. பிறகு, பல்வேறு இதழ்களில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. வெகுஜன இதழ்களில் பிரசுரமான கதைகளைத்தான், ‘கை நழுவும் சொர்க்கம்’ தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.

இதில் இடம்பெற்றுள்ள, 12 கதைகளும் பத்திரிகை ஆசிரியர்களால், தரம் பார்த்து பிரசுரிக்கப்பட்டது என்பதால், இதில் உள்ள எழுத்துகள் அத்தனையும் நன்முத்துகளாக மிளிர்கின்றன.

நன்றி: தினமலர், 5/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *