உன்னைவிட்டு விலகுவதில்லை

உன்னைவிட்டு விலகுவதில்லை, எஸ். செல்வசுந்தரி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. திருநங்கைகள், திருநம்பிகளின் விமர்சனங்களை கேள்விகளாக்கி நாவலில் விடை தேடும் முயற்சி இது. மூன்றாம் பாலினத்தின் மூடப்பட்ட ரகசியங்களை நாவலில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். மூன்றாம் பாலினத்தின் மீது சமுதாயம் திணிக்கும் அழுத்தம், அவர்களின் வாழ்வைப் பற்றிய குறைந்தபட்ச புரிதல் கூட இன்றி அவர்களை ஏளனமாக கடந்து போவதைச் சுட்டிக்காட்டுகிறார். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

கை நழுவும் சொர்க்கம்

கை நழுவும் சொர்க்கம், எஸ். செல்வசுந்தரி, இனிய நந்தவனம் பதிப்பகம். தவறுகளை துரத்தி அடிக்கும் போர்க்கருவியாக படைப்பாளிகளுக்கு எப்போதுமே, எழுத்துகள் இருக்கின்றன. அவை கவிதையாகவும், புதினமாகவும், சிறுகதையாகவும் வெளிப்படுகின்றன. ‘செல்வசுந்தரி’யும் அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். அதற்கு சாட்சி, அவரின் கைநழுவும் சொர்க்கம் சிறுகதைத் தொகுப்பு. புதினம் எழுதுவது எளிது; சிறுகதைகள் எழுதுவது தான், கடினம் என்றொரு கருத்து உண்டு. செல்வசுந்தரி, தன் சிறுகதை நூல் தொகுப்பின் வாயிலாக அந்த கடினமானப் பணியை செவ்வனே செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். ‘கை நழுவும் […]

Read more