எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்கள்
எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 350ரூ.
எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் “சதிலீலாவதி”. இது 1936-ம் ஆண்டு வெளிவந்தது. அறிவிருந்து பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவருடைய 15-வது படமான ‘‘ராஜகுமாரி” , அவரை கதாநாயகனாக உயர்த்திய படம். அது முதல் ஏறுமுகம்தான்.
1977-ல் சட்டசபை தேர்தலில் அவருடைய அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. முதல் – அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் நடித்து முடித்து படம் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” (1978). இது அவருடைய 133-வது படம். அதன் பிறகு நடிக்கவில்லை. சினிமா பற்றி ஆராய்ச்சிகள் செய்து, புத்தகங்கள் எழுதி வரும் கவிஞர் பொன்.செல்லமுத்து, “சதிலீலாவது முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை” என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில், எம்.ஜி.ஆர். பற்றியும், நடித்த படங்கள் பற்றியும் அபூர்வத் தகவல்கள் நிறைய உள்ளன.
எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய டைரக்டர்கள், எம்.ஜி.ஆருடன் கதாநாயகிகளாக நடித்தவர்கள், பாடல் ஆசிரியர்கள், எம்.ஜி.ஆர். நடிக்க இருந்து நின்றுபோன படங்கள்… இப்படி ஏராளமான தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. எம்.ஜி.ஆர். ரசகிர்களுக்கு இது ஒரு திகட்டாத விருந்து.
நன்றி: தினத்தந்தி, 1/3/2017.