அரசியல் அறிவியல்
அரசியல் அறிவியல், டாக்டர் S.இராமநாதன், டாக்டர் K. செந்தில்குமார், நோசன் பிரஸ், பக். 140, விலை 175ரூ.
இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும் அரசியல் அறிவியல் (Political Science) துறையில் மட்டுமின்றி மற்ற சில துறைகளிலும் ஆராய்ச்சி பட்டங்களைப் பெற்றவர்கள். NET/SLET. IAS மற்றுமுள்ள போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களை மனதில் கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார்கள்.
அரசியல் என்பது வெறும் நிர்வாகத்துறையை மட்டுமின்றி, சட்டத்துறை, நீதித்துறை, அறிவியல், பொருளாதாரம், விவசாயம், தொழிற்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, விளையாட்டுத்துறை… என்று அனைத்து துறைகளையும் ஒழுங்கப்படுத்தி செல்லும் ஆளுமை கொண்டது.
வேகமான இன்றைய உலகில், அரசயலில் பல சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றை சீர்படுத்தும் ஆற்றல் இளையதலைமுறையினருக்கு, குறிப்பாக மாணவர்களுக்குத் தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்பே சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவஞானிகள் தொடங்கி, சமீப கால அறிஞர்கள் வரை பலரின் தீவிர முயற்சிகளால் அரசியல் எப்படியெல்லாம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்ற விபரங்களை இந்நூல் விவரிக்கிறது. இந்நூலில் 15 கட்டுரைகள் உள்ளன. அவற்றில் அரசு, அரசாங்க வகைகள், கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் தத்துவம், அரசியல் சாசன சட்டம், இறையாண்மை, உரிமைகள், சுதந்திரம், சமத்துவம், பாசிஸம், நவீன அரசியல், பன்னாட்டு உறவுகள்… என்றுள்ள பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற தகவல்கள் பொதிந்துள்ளன.
போட்டித் தேர்வுகளுக்க மட்டுமின்றி, அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷமாகும்.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 22/2/2017.