கறுப்புக் குதிரை
கறுப்புக் குதிரை, நரேன் ராஜகோபாலன், நவி பதிப்பகம், விலை 150ரூ.
500, 1000 ரூபாய் திடீரென ஒரு ராத்திரியில் மதிப்பிழந்த நிலையில் நம்மில் நிறையப் பேர் நிலைகுலைந்து போனோம். அதற்கான காரண, காரியங்கள் தெரியாது. எரிச்சலே மிஞ்சியது.
இந்த சூழலில் இப்புத்தகத்தில் கறுப்புப் பணம், பண மதிப்பிழப்பு இவற்றின் ஆதி அந்தங்களை விரிவாக எடுத்து வைக்கிறார் நரேன். ஆனால், ஆவணக் கட்டுரைகளின் சாயல் துளியும் எட்டிவிடாமல், ‘துறுதுறு’வென இவைகளின் சாரம் மட்டுமே புரிகிறது.
கறுப்புப் பணம், பெரு வங்கிகள், மென்பொருள் துணை கொண்ட டிஜிட்டல் பரிமாற்றங்கள், பங்குச் சந்தை பரிமாற்றங்கள், ரொக்கமில்லாப் பொருளாதாரம் என பிரகாசமாக சுலபமான மொழியில் தருவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பு. இவ்வகை நூல்கள் பொருளாதார நிபுணர்களுக்கு புரிபடும் என்ற நிலை மாற்றி, பாடம் சொல்லித் தருவது மாதிரி சொல்லித் தருகிறார். அனுபவம் செறிந்து இருந்தாலே இது சாத்தியம்.
நாம் விபரம் அறியாமல் இந்த பிரபஞ்சத்தில் வாழ்தல் எளிதல்ல. நிறைய விஷயங்கள் புரிபட இந்த நூலை பரிந்துரைப்பதும், நீங்களே படிப்பதும் உத்தமம். தவிர, உங்களின் மனிதல் இருக்கிற பொருளாதாரம், பரிவர்த்தனை குறித்த அத்தனை கேள்விகளுக்கும் விடை இருக்கிறது. போதாதா!
நன்றி: குங்குமம், 27/1/2017.