மறுதுறை மூட்டம் (நாகார்ஜுனன் நேர்காணல்)
மறுதுறை மூட்டம், (நாகார்ஜுனன் நேர்காணல்), நேர்காணல் : எஸ். சண்முகம், நெறியாள்கை: முபின் சாதிகா, கலைஞன் பதிப்பகம், விலை 180ரூ.
தமிழில் பின்நவீனத்துவம் காட்டிய எழுத்துக்களில், அதை அடையாளப்படுத்தியதில் நாகார்ஜுனனுக்கு பெரும் இடம் உண்டு. அவரது முழு நேர்காணலின் மூலம் துடிப்பும், அக்கறையும், பரந்துபட்ட அறிவும், சொல்லாடலின் செழுமையும் இந்த நூல் முழுமையும் பரவிக்கிடக்கிறது.
ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் கருத்து வைக்கும் இடம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. நாகார்ஜுனனின் வற்றாத உழைப்பும், மிகையற்ற மதிப்பீடுகளும், அகந்தையற்ற மனமும், மனிதநேய இழைவும் மிகவும் முக்கியமானவைகளாக இந்த நூலில் பதிவாகி இருக்கின்றன.
எது ஒன்றிற்கும் அவரிடம் சரியான பதில் இருப்பதும், அதை நம்மிடம் பகிர்ந்து கொள்வதுமாக அருமையான உரையாடலை நோக்கிய இனிய நிகழ்வு இந்தப் புத்தகம். நேர்த்திமிக்க உரையாடலை நிகழ்த்துவதற்கான உழைப்பை கேள்விகளின் வழியாக எஸ். சண்முகம் எழுப்பியிருக்கிறார். அதை இறுதிப்படுத்தியதில் முபின் சாதிகாவின் பணியும் முக்கியமானது.
நன்றி: குங்குமம், 13/1/2017.