வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்
வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள், தொகுப்பாசிரியர் கழனியூரன், மேன்மை வெளியீடு, பக்.368, விலை ரூ.275.
எழுத்தாளர் வல்லிக்கண்ணன், திறனாய்வாளர் தி.க.சி.க்கு எழுதிய 161 கடிதங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நூல் இது. தி.க.சி. வல்லிக்கண்ணனைக் ‘குருநாதர் 39‘ என்று குறிப்பிட்டாலும், வல்லிக்கண்ணனின் ‘பிரிய சகோதரராகவே 39‘ அவர் இருந்திருக்கிறார்.
அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், இலக்கிய இதழ்கள், இலக்கியக் கூட்டங்கள், கூட்டங்களில் நடந்த கலாட்டாக்கள், மழை பெய்தது, பெய்யாமல் வெயில் கொடுமைப்படுத்தியது என எல்லா விஷயங்களையும் வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதியுள்ளார்.
சுவாரசியமான பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, ‘நேற்று முதல் ஸ்பெஷல் பஸ்கள் ஓடுகின்றன. ஒவ்வொரு பஸ்ஸிலும் கூட்டம்தான். வாழ்க்கையில் வெறுமையையும் வறுமையையும் மறப்பதற்காக இப்படி எல்லாம் முட்டி மோதிப் போய் அல்லல்படுகிறார்களோ மனிதர்கள்! விளங்கவில்லை 39; (14.4.79).‘
‘ஒருதலை ராகம் 39‘ படம் சிவசக்தியில் 60வது நாளாக பெரும்போடு போடுகிறது. 2.30 மணிக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வருகிற பெண்கள், ஆண்களை நிறையவே காண முடிகிறது 39 (17.9.80).‘
‘மக்களின் வாழ்க்கை பலவழிகளிலும் மோசமாகி வருகிறது. சில்லறைக் காசுகள், ஒரு ரூபாய் தட்டுப்பாடும் பஞ்சமும் சதா மிகுந்த சிரமங்களையும் நஷ்டங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கிராமங்கள் பின்னோக்கிச் சிதைகின்றன .39 (31.12.14)’ என நிறையச் சொல்லலாம்.
இலக்கியவாதிகள் – அரசியல்வாதிகளுக்கு இடையிலான உறவுகள், அக்காலகட்டத்தில் நடந்த இலக்கிய இதழ்கள் பற்றிய செய்திகள் என இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கடிதங்கள் எல்லாம் அவை எழுதப்பட்ட காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
நன்றி: தினமணி, 1/5/2017.