வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்

வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள், தொகுப்பாசிரியர் கழனியூரன், மேன்மை வெளியீடு, பக்.368, விலை ரூ.275. எழுத்தாளர் வல்லிக்கண்ணன், திறனாய்வாளர் தி.க.சி.க்கு எழுதிய 161 கடிதங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நூல் இது. தி.க.சி. வல்லிக்கண்ணனைக் ‘குருநாதர் 39‘ என்று குறிப்பிட்டாலும், வல்லிக்கண்ணனின் ‘பிரிய சகோதரராகவே 39‘ அவர் இருந்திருக்கிறார். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், இலக்கிய இதழ்கள், இலக்கியக் கூட்டங்கள், கூட்டங்களில் நடந்த கலாட்டாக்கள், மழை பெய்தது, பெய்யாமல் வெயில் கொடுமைப்படுத்தியது என எல்லா விஷயங்களையும் வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதியுள்ளார். சுவாரசியமான பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

தி.க.சி. என்றொரு தோழமை

தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 250, விலை 281ரூ. தோழர் தி.க.சி. என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தி.க.சிவசங்கரன், 2014, மார்ச், 25ம் தேதி மறைந்தார். அவரது நினைவைப் போற்றும்வகையில், பல்வேறு அறிஞர்கள், அஞ்சலி செலுத்தினர். அவற்றை நூலாக்கம் செய்யவேண்டும் என்னும் ஆர்வத்தில் தொகுப்பாசிரியர், 52 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். நாளிதழ்கள், பேரிதழ்கள், சிற்றிதழ்கள், மின்னிதழ்கள் என்று, அனைத்துவிதமான பத்திரிகைகளிலும், வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த தொகுப்பில் கி.ரா., பொன்னீலன், வண்ணநிலவன், பாவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் தி.க.சி. […]

Read more

தி.க.சி. என்றொரு தோழமை

தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 274, விலை 250ரூ. தி.க.சி. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் வசியப்படுத்தாத, அவரிடம் வசியப்படுத்தாத, அவரிடம் வசப்படாத இலக்கிய உலக ஆளுமைகள், வெகு குறைவு. எழுதத் தொடங்கும் எல்லார் மீதும் அவர் பாராட்டு மழை பொழிந்தார். அந்தப் பாராட்டு மழையை உரமாக்கிக் கொண்டு இலக்கிய உலகில் வாழ்ந்து செழித்தவர்கள் பலர். அவ்வாறு தி.க.சி.யால் உரம் பெற்ற பலரும், அவர் மறைந்துவிட்டார் என்ற உடன், தாமே முன்வந்து தமது நினைவலைகளை எழுத்தில் வடித்திருக்கின்றனர். […]

Read more