உங்கள் சத்யராஜ்

உங்கள் சத்யராஜ், சபீதா ஜோசப், குமரன் பதிப்பகம், விலை 150ரூ.

சத்யராஜ் வாழ்க்கைப்பாதை

நடிகர் சத்யராஜின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் “உங்கள் சத்யராஜ்”. சத்யராஜே தன்னைப் பற்றிய சுவையான சம்பவங்களைக் கூறுவதுபோல் இதை எழுதியுள்ளனர், பிரபல எழுத்தாளர் சபிதா ஜோசப்.

சத்யராஜ், ஜமீன்தார் வீட்டுப்பையன். ஆயினும் சினிமா நடிகராக ஆசைப்பட்டார். சோதனைகளையும், அவமானங்களையும் தாங்கிக்கொண்டு, படிப்படியாக உயர்ந்தார்.

தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது சிவாஜிகணேசனின் ஆசை. ஆனால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை. பெரியாராக நடித்தவர் சத்யராஜ்தான். இப்படி ஏராளமான சுவையான, ஆச்சரியப்படத்தக்க, வேடிக்கையான நிகழ்ச்சிகள் இந்நூலில் உள்ளன. அருமையான நாவலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *