வானதியின் எண்ணச் சிறகுகள்

வானதியின் எண்ணச் சிறகுகள், வானதி சந்திரசேகரன், விஜயா பதிப்பகம்.

கல்லூரி காலத்தில், கவிதாயினியாக மலர்ந்தவர்; பின், குடும்பத்திற்காக, 24 ஆண்டுகளை ஒதுக்கி, கவிதையை ஒதுங்கியிருந்தவர், குடும்பத்தார் தந்த உற்சாகம் காரணமாக, தற்போது, நிறைய கவிதைகள் எழுதி வருகிறார்.

இடைப்பட்ட, 24 ஆண்டுகளில் நீர்த்துப் போகாதிருக்கும் இவரது வளமான தமிழால், பல விஷயங்களை பாடியிருக்கிறார். அதிலும், கரிசல் காடு, களிறுகளும், கயவர்களும் உள்ளிட்ட, பல கவிதைகள் அருமை!

கவிதையை, வெறும் அலங்காரத்திற்கு பயன்படுத்தாமல், சுற்றுப்புறச்சூழல், மதுவின் பாதிப்பு, தவறான உணவு வகை, வனங்கள் அழிப்பின் அவலங்கள் என்று, சமூக அக்கறையோடு, கவிதைகள் இருப்பது கவிதைக்கும் சிறப்பு, இவருக்கும் சிறப்பு.

நன்றி: தினமலர், 12/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *