சனிபகவானின் பெருமை
சனிபகவானின் பெருமை, ராபர்ட் ஈ.ஸ்வோபோடா, தமிழில் கீதா ஆனந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக்.272, விலை ரூ.170.
சனி துன்பங்களைத் தரக் கூடியவர் என்று கருதப்படுகிறார். சனி தரும் துன்பத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்று பலர் சோதிடர்களை நாடுகின்றனர். சனி மனிதர்களைப் பாதிப்பதைப் போலவே, மனிதர்களின் நடவடிக்கைகள் சனியின் செயல்களைப் பாதிக்கின்றன என்ற அடிப்படையில்தான் சோதிடர்கள் மனிதர்களுக்குப் பரிகாரங்களைக் கூறுகின்றனர். இந்த நூல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தைத் தருகிறது.
விக்கிரமாதித்தனை ஏழரை நாட்டுச் சனி பாதித்ததால் ஏற்பட்ட பிரச்னைகளை கதை வடிவில் மிக விரிவாகக் கூறுகிறது.
‘சனியை அனைத்துக்கும் எல்லை, கண்ணால் காணும் உலகின் முடிவு என்று கருதினால் அதற்கு யமன் அதி தேவதை ஆகிறார். ஆனால் சனியை அனைத்தையும் உள்ளடக்கியது என்று கருதினால், அதற்கு பிரம்மா அதி தேவதையாகிறார்.39’
‘சனி பகவான் நம்மை க்ஷணத்துக்குச் க்ஷணம் இறைவனிடம் சரணடைய, விடுதலை பெற அழைப்பு விடுத்த வண்ணம் நமக்கு எதிரே ஒவ்வொரு நொடியும் அமர்ந்திருக்கிறார். சனியின் இருப்பை உணர்ந்தபடி உங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் வாழ முடிந்தால் எப்போதும் நீங்கள் விதியை நினைத்து நொந்து கொள்ள வேண்டியிருக்காது 39’ என சனி பகவானைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை மாற்றக்கூடிய வகையில் தெளிவாக இந்நூல் கூறும் கருத்துகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவையாகும்.
நன்றி: தினமணி, 12/6/2017.