பாகுபலி தொடக்கத்திற்கு முன் – சிவகாமி பர்வம்
பாகுபலி தொடக்கத்திற்கு முன் – சிவகாமி பர்வம், ஆனந்த நீலகண்டன், தமிழாக்கம் மீரா ரவிசங்கர், விலை 299ரூ.
பாகுபலி தொடக்கத்திற்கு முன்
டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில், “பாகுபலி 2” வெளிவந்து, வசூலில் புரட்சி செய்து வருகிறது. ரூ. 500 கோடியில் தயாரித்த படத்திற்கு, ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல்.
இந்தப்படத்தில் சிவகாமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். சிவகாமியின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதத்தில் “சிவகாமி பர்வம்” என்ற இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சிவகாமிக்கு ஐந்து வயதாகும்போது அவளுடைய தந்தை “ராஜதுரோகி” என்று குற்றம் சாட்டப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்.
அதற்குப் பழி வாங்க, மகிழ்மதி நாட்டை அழிப்பேன் என்று சிவகாமி சபதம் செய்கிறாள்… இப்படி தொடங்கும் கதை விறுவிறுப்பாக செல்கிறது. “பாகுபலி” படத்தைப் பார்த்தவர்களுக்கு, இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கும் என்பது நிச்சயம்.
நன்றி: தினத்தந்தி, 24/5/2017.