யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்

யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்,   குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 160ரூ.

சுமார், 1400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு நடந்தே வந்த சீனத் துறவி யுவான் சுவாங். புததர் பிறந்த இடத்தை நேரில் பார்ப்பது, புத்தருடைய கொள்கைகளை விரிவாக ஆராய்வது, ஆகியவை அவருடைய நோக்கம். பாலைவனங்கள், பயங்கர காடுகள், வனவிலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அவர் அஞ்சவில்லை.

இரவு, பகலாக நடந்தார். தமிழ்நாட்டுக்கும் (காஞ்சீபுரத்துக்கு) அவர் வந்தார். இந்தியாவில் மொத்தம் 17 ஆண்டுகள் தங்கி இருந்தார். பின் சீனாவுக்குத் திரும்பினார். தன் சுற்றுப்பயணம் பற்றியும், இந்தியாவில் தனது அனுபவங்கள் பற்றியும் ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டார்.

அன்றைய இந்தியா பற்றி, அந்த நூல்கள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார், எழுத்தாளர் குன்றில்குமார். அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள நூல்.

நன்றி: தினத்தந்தி, 25/5/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *