சகத்திப்பூ
சகத்திப்பூ, ஆம்பல் கனகராஜ், தீவிகா பதிப்பகம், விலை 150ரூ.
விவசாயக் கூலித் தொழிலாளர்களின் அவல நிலையை விளக்கும் நாவல். ஒவ்வொரு நாளும் நாளைய பிழைப்பைத் தேடி உண்மையாய் உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி இந்த நாவலில் ஆம்பல் கனகராஜ் சித்தரித்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 25/5/2017.
—-
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள், காளீஸ்வரி பதிப்பகம், விலை 110ரூ.
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்களின் வாழ்க்கை முறை பிரமிப்பைத் தரக்கூடியவை. அந்த சித்தர்கள் பல்வேறு நோய்களுக்கு சிறந்த மூலிகை மருத்துவ முறைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அதை இந்த நூலில் எழுத்தாளர் ஜெகாதா விளக்கியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 25/5/2017.