ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், விலை 70ரூ.
மறைந்த ஜனாதிபதி, பாரத ரத்னா, ஏவுகணை நாயகர் அப்துல்கலாம், மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக அதே சமயம் மனதைத் தொடுகிற விதத்தில் எழுதியுள்ளார் விருதை ராஜா.
நன்றி: தினத்தந்தி, 25/5/2017.
—-
மனிதர்களின் அலட்சியங்களும் தீர்வுகளும், சா.ஜெயக்குமார், மணிமேகலைப்பிரசுரம், விலை 70ரூ.
சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனால், அவனுடைய வாழ்க்கையை இன்பமாகவும், சிறப்பானதாகவும் அமைத்து கொள்ள முடியவில்லை என்பதற்கு விடையளிக்கும் நூலாக இந்த நூல் அமைந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி, 25/5/2017.