த மெனி கேரியர்ஸ் ஆஃப் டி.டி. கோசாம்பி கிரிடிகல் எஸ்ஸேஸ்
த மெனி கேரியர்ஸ் ஆஃப் டி.டி. கோசாம்பி கிரிடிகல் எஸ்ஸேஸ், தொகுப்பு டி.என்.ஜா., லெஃப்ட் வேர்ட், விலை 275ரூ.
பன்முக மேதை டி.டி. கோசாம்பி
தாமோதர் தர்மானந்த கோசாம்பி (டி.டி.கோசம்பி) கணிதப் பேராசிரியராக இருந்தபோதிலும், இந்திய வரலாறு, இந்தியவியல், மொழியியல், மதங்கள், சாதிகள், நாணயவியல், புள்ளியியல் எனப் பல்வேறு துறைகளிலும், இந்தியாவை மையமாகக் கொண்ட ஆய்வுகளை முன்வைத்துப் புதிய ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் உருவாக்கிய பேரறிஞர். அவரது தந்தை தர்மானந்த கோசாம்பி, இந்தியாவில் பாலி மொழி இலக்கியத்துக்கு உயிரூட்டியதோடு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் ஆசிரியர் பணியாற்றியவர்.
எண்ணற்ற சமஸ்கிருத நூல்களைத் தேடிக் கண்டறிந்தவர். தந்தை – மகன் இருவருமே புணே ஃபெர்கூஸன் கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களும் டி.டி. கோசாம்பியின் நூற்றாண்டை ஒட்டி, ஆய்வரங்குகளை நடத்தின. இந்திய நாணயவியலின் தந்தை எனப் போற்றப்படும் கோசாம்பியின் பன்முகத் திறனை அறிமுகப்படுத்தும் இத்தொகுப்பில், முதல் ஏழு கட்டுரைகள் இந்திய வரலாற்று ஆய்வுக்கான பல்வேறு துறைகளில் கோசாம்பியின் பங்கை விவரிக்கின்றன.
இறுதிக் கட்டுரை ஒரு கணித மேதையாக கோசாம்பியின் ஆய்வு முறைகளை விவரிக்கிறது.
-வீ.பா.கணேசன்.
நன்றி: தி இந்து, 12/8/2017.