முதுமை ஒரு முழுநிலா

முதுமை ஒரு முழுநிலா (வினா விடையில் முதியோர் நல மருத்துவம்), டாக்டர் வ.செ.நடராசன், வானதி பதிப்பகம், பக்.223, விலைரூ.150.

முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் பற்றி கேள்வி-பதில் வடிவில் எழுதப்பட்டுள்ள சிறப்பான நூல் இது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் 35 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறையாக முதியோர் நல மருத்துவத் துறையை ஏற்படுத்தியவர் டாக்டர் வ.செ.நடராசன். முதுமையை வெற்றிகரமாக எதிர்கொண்டு தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு முதுமை, உடல் நலம், மூளை நரம்பு நோய்கள், மூட்டு-எலும்பு தொல்லைகள், உடற்பயிற்சி, மன நலம், உணவு முறைகள், வயிறு-குடல் சார்ந்த தொல்லைகள், சிறுநீரகத் தொல்லைகள், நுரையீரல் தொல்லைகள், முதுமையில் தடுப்பூசி, கோடை-குளிர் கால பிரச்னைகள், குடும்ப நலம் உள்பட 19 தலைப்புகளில் தனது மருத்துவ அனுபவத்தை விரிவாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

உடல் நலம் என்ற தலைப்பில் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க நடைப் பயிற்சி உள்பட எவற்றையெல்லாம் செய்ய வேண்டும், முதுமையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப எந்த எந்த உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிட வேண்டும், சுகமான தூக்கத்துக்கான குறிப்புகள், கண் தானத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் என இந்த நூலின் சிறப்பு அம்சங்களைப் பட்டியலிடலாம்.

‘எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி, சீரான உடல் நலம், ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, தியானம் மற்றும் உண்மையான உறவுகள் இவற்றோடு சற்றே பொருளாதார வசதியும் இருந்தால் முதுமைப் பருவம் ஒரு முழு நிலவே 39‘ என்கிறார் நூல் ஆசிரியர்.

நன்றி: தினமணி, 31/7/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *