பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க

பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க,  டாக்டர் வ.செ.நடராசன், வானதி பதிப்பகம், பக்.88, விலை ரூ.60. பாப்பாவுக்கு மட்டுமல்ல தாத்தாவுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்கிறார் இந்நூலின் ஆசிரியர். முதியோர் நலத்துறையில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்ற இவர், முதியோர் நலன் குறித்து சுமார் 30 நூல்களை எழுதியுள்ளார். ‘முதுமையை முறியடிப்போம்’, ‘இதய நலம் காப்போம்’ ஆகிய இரண்டு குறுநூல்களைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். ஒரு மனிதனுக்கு 60 வயதில் இருந்தே முதுமைக் காலம் தொடங்குகிறது. இந்தக் காலத்தில் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணிக் காத்துக் […]

Read more

முதுமை ஒரு முழுநிலா

முதுமை ஒரு முழுநிலா (வினா விடையில் முதியோர் நல மருத்துவம்), டாக்டர் வ.செ.நடராசன், வானதி பதிப்பகம், பக்.223, விலைரூ.150. முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் பற்றி கேள்வி-பதில் வடிவில் எழுதப்பட்டுள்ள சிறப்பான நூல் இது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் 35 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறையாக முதியோர் நல மருத்துவத் துறையை ஏற்படுத்தியவர் டாக்டர் வ.செ.நடராசன். முதுமையை வெற்றிகரமாக எதிர்கொண்டு தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு முதுமை, உடல் நலம், மூளை நரம்பு நோய்கள், மூட்டு-எலும்பு தொல்லைகள், உடற்பயிற்சி, மன நலம், உணவு முறைகள், […]

Read more

முதுமையை வெல்வோம்

முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ. நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், பக். 96, விலை 100ரூ. முதுமைப் பருவம் நம் வாழ்க்கைப் பயணத்தில் இயல்பானதுதான். ஆனால் நம் மனம், முதுமைப் பருவத்தை மட்டும் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக்கொள்கிறது. முதுவையில் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளும், இந்த பருவத்தில் மரணம் குறித்து உண்டாகும் பயமும்தான் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும். முதுமையில் ஏற்படும் உடல், மனரீதியான பிரச்னைகளுக்கான தீர்வுகளையும், மரண பயத்தை வெல்வதற்கான சூட்சுமங்களையும் உள்ளடக்கிய நூல்தான் இது. முதுமையில், சர்க்கரை நோய், உயர் […]

Read more

முதுமையை வெல்வோம்

முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ.நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், திருப்பூர், சென்னை, விலை 100ரூ. முதியோர் நல மருத்துவரான நூலாசிரியர் முதியோர்கள் தங்களை உணர்ந்து கொள்ளவும், தங்கள் வீட்டிலுள்ள முதியவர்களை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடாகவே இதனை தொகுத்துள்ளார். அத்துடன் முதியோருக்கு தேவையான மனநல ஆலோசனைகள், முதிய பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி கடைபிக்க வேண்டிய உணவுப்பழக்கம், நோய்களைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை, ஏற்கனே வந்துவிட்ட நோய்களுக்கான சிகிச்சைகள், குறிப்பாக முதிய வயதில் பெண்களைத் தாக்கும் பிரத்யேகப் பிரச்சினைகள் என […]

Read more