மதுரைக் கதைகள்
மதுரைக் கதைகள், நர்சிம், மெட்ரோ புக்ஸ், விலை 200ரூ.
தூங்கா நகரான மதுரை மண்ணிண் மணம் கமழ எழுதப்பட்டிருக்கும் இருபத்தைந்து கதைகள். ஜல்லிக்கட்டு காளை விடுவதில் தொடங்கும். முதல் கதையில் இருந்து கடைசி கதைவரை ஒரே துள்ளலும், ஓட்டமும், தாவலுமாகவே நகர்கிறது. ஒவ்வொரு கதையும் ஜனனம் தொடங்கி மரணம் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. படித்து முடித்ததும் மனசு கொஞ்சம் கனமாவது நிச்சயம்.
நன்றி: குமுதம், 2/8/2017