என் கவிதைகள்

என் கவிதைகள்,கே. நடராஜன், ஸ்பீடு பிரிண்டர்,  பக்.106 விலை ரூ.90

சுவடுகள் தந்த அனுபவம் சுவடுகள் ஏற்றிடும் வாழ்வின் தொகுப்பு, என சித்தர் சுவாமிகளின் முகப்பு வரிகளுடன் கே. நடராஜனின் என் கவிதைகள் நூலுக்குள் நுழைந்தால். மணி மணியான நூறு தலைப்புகள், அத்தனையும் தினமணி கவிதை மணியில் கொடுக்கப்பட்ட தலைப்புகள், அதற்கு அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

கே.நடராஜன். விமான நிலைய ஆணையத்தில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அவரின் கவிதை தாகத்திற்கு தினமணி கவிதை மணி நீரூற்றியதாக அறிமுக உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது தமிழாசியர் பள்ளி பருவத்தில் அவரை ஊக்கப்படுத்தியதை நினைவு கூர்கிறார்.

உணர்வுகளின் தொகுப்பு, வார்த்தைகளின் அலங்காரம், என்று மட்டுமலாமல், கருத்துச் செரிவு, இலக்கண நடையுடன் கவிதைகளை கொடுக்கப்பட்ட தலைப்பில் இருந்து பிறழாமல் எழுதி வாரம் தோறும் பங்கெடுத்த கே.நடராஜன் அவரின் அனைத்து கவிதைகளையும் தொகுத்துள்ள விதமும் நேர்த்தி மிக்கதாக இருக்கிறது. முன்னாள் ஐ.ஏ.எஸ் என். விட்டல் இந்த தொகுப்பிற்கு அணிந்துரை கொடுத்துள்ளார்.

எல்லையற்று விரிந்து கிடக்கும் வானத்தை போல் கவிஞரின் கற்பனையும் அப்படியானதே.. காற்று வேகத்தில் உருவாக்கப்பட்ட கவிதைகள் ஆயினும் கருத்துக்கள் கல்வெட்டில் செதுக்க தகுத்தவை என்று பாராட்டியுள்ளார். அவரின் திறமை அனைத்து கவிதைகளிலும் பளிச்சிடுகிறது என்றாலும் பறவையின் மனசு, வாழ்க்கையின் தூரங்கள்,இன்றைய தாலாட்டு, நிழல் தேடி என பல கவிதைகளை சொல்லலாம்.

நன்றி: தினமணி, 21/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *