கடவுளால் முடியாத செயல்கள்

கடவுளால் முடியாத செயல்கள், முரு.பழ.ரத்தினம் செட்டியார், பதிப்பாசிரியர் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலை 125ரூ.

மயிலம், பொம்மபுர ஆதினத் திருமடத்தில் நடந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 12ம் ஆண்டு விழா மாநாட்டில் வெளியிடப்பட்ட நூல். சைவ சித்தாந்த ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல ஆய்வுப் பெட்டகமாகவும், ஆய்வு அணுகுமுறைகளோடு சைவ சித்தாந்தத்தை உணர வைக்கிறது.

அத்துடன் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைகளை ஆராய்பவர்கள் ஆராய்ச்சி முறைகளுக்காகவும், தெளிவுக்காகவும் படிக்க வேண்டிய புத்தகம். முரு.பழ.ரத்தினம் செட்டியார் எழுதிய இந்த நூலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் ‘சித்தாந்தம்’ இதழில் தொடர் கட்டுரைகளாக வெளியாகின. விலை 125ரூ.

இதே பதிப்பகம் வெளியிட்டுள்ள இதர நூல்கள், தமிழச் சூழலில் மொழி மேலாண்மை. விலை 80ரூ. தேவார அருள்முறைத்திரட்டு விலை 40ரூ.

நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *