புனைவு வெளி
புனைவு வெளி, நா. விச்வநாதன், பேசும் புதிய சக்தி பதிப்பகம், விலை 150ரூ.
சி.சு.செல்லப்பா தொடங்கி தஞ்சை ப்ரகாஷ் வரை 18 இலக்கிய பிதாமகர்களைப் பற்றிய எழுத்துக் கோலம்தான் இந்தப் புத்தகம். எளிய வாசகர்களுக்கும் எழுத்து ஆளுமைகளை அடையாளம் காட்டும் விதமாக எளிமையான தமிழில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம். தமிழுக்கு நல்வரவு.
ஒரு ஆரம்பப் பள்ளி வாத்தியார் தோற்றம், ஒரு மாத தாடி’ என்று சி.சு.செல்லப்பாவை இவர் உருவகிக்கும் சித்திரம் வாசகரை 60-களின் செல்லப்பாவைத் தேட வைக்கிறது. ஒவ்வொரு தனிநபரும் ஒரு தத்துவம்தான். தரிசனம்தான்.
யாரோ ஒருவரது வழியைப் பின்பற்றினால் தன் சுயத்தை இழக்க நேரிடும். நம்மையே இழந்துவிட்டால் அடையப்போவது எதுவுமில்லை. ‘நித்திய கன்னி’ தொடங்கி ‘காதுகள்’ வரை இதைத்தான் எம்.வி.வெங்கட்ராம் செய்தார் என்று நா.விச்வநாதன் அம்புக்குறி போட்டுக் காட்டுகிறார். இப்படியாக 18 ஆளுமைகளைப் பற்றிய அலாதியான சொல் பரிவர்த்தனைகள் விரவிக்கிடக்கின்றன இந்தப் புத்தகம் முழுவதும்.
-மானா.
நன்றி: தி இந்து, 21/10/17