திருக்குர்ஆனில் மறுமை
திருக்குர்ஆனில் மறுமை, தமிழில் கே.எம். முகம்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 210ரூ.
மறுமை குறித்து சிந்திக்காத முஸ்லிம் யாரும் இருக்க முடியா. இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில், இறைநம்பிக்கையுடன், மறுமையின் மீதுள்ள நம்பிக்கையும் இணையும் பொழுதுதான் அது முழுமை பெறுகிறது.
ஒவ்வொரு தனிமனிதனின் மறுமை வாழ்வு அவனது மரணத்தில் இருந்துதான் தொடங்குகிறது. மறுமை எப்படி நிகழும்? உலக அழிவு எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கு கேரள இஸ்லாமிய அறிஞர் கே.சி. அப்துல் லாஹ் மவுலவி அழகிய முறையில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த நூல். இதை தமிழில் கே.எம். முகம்மத் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூலில் மறுமை நிகழ்வுக் காட்சிகளை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர். குர்ஆன் எத்தகைய மறுமையை முன் வைக்கிறது என்பதை அறிந்துகொள்ள வகை செய்யும் நூல்.
நன்றி: தினத்தந்தி, 1/11/2017.