ரஜினீஷ் எனும் ஓஸோ
ரஜினீஷ் எனும் ஓஸோ, யோக சித்தர் டாக்டர் மானோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ.
பாலுணர்வில் இருந்து விடுதலை அடைவதற்கு சரியான வழி சொன்னவர் ஓஸோ. தவறான அணுகுமுறையால் காமமே வாழ்க்கையாக்கிக் கொண்ட நமக்கு விடுதலை வாங்கி கொடுத்தவர் ஓஸோ.
அவர் பாலுணர்வுவை மட்டும் போதிக்கவில்லை. பிரார்த்தனை, கடவுள், அன்பு மரணம், தியானம் இன்னும் மானிட சம்பந்தமான அனைத்தையும் அலசி ஆராய்ந்து 600 நூல்களில் தன்னுடைய கருத்தை பிரச்சாரமாக தந்துள்ளார்.
அந்த 600 நூல்களில் சொன்ன அத்தனை கருத்துக்களையும் ரத்தின சுருக்கமாக இந்த நூலில் நூலாசிரியர் அளித்து உள்ளார். அத்துடன் ஓஸோவின் சொற்பொழிவுகளே நூல்களாக வடித்து பொன் மொழிகளாக அளிக்கப்பட்டு உள்ளன.
நன்றி: தினத்தந்தி, 3/1/2018