தமிழ்மகள் சிறுகதைகள்
தமிழ்மகள் சிறுகதைகள், தமிழ்மகள், உயிர்மை பதிப்பகம், விலை 550ரூ.
பல நாவல்களும் ஏராளமான சிறுகதைகளும் எழுதியுள்ள தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன், ஜுனியர் விகடனில் பணியாற்றுகிறார். அவருடைய பல நாவல்கள், பரிசுகளும், விருதுகளும் பெற்றவை. இவர் எழுதிய சிறுகதைகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 80 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. 3 பக்கக் கதைகளும் உண்டு. 10 பக்க கதைகளும் உண்டு. கதைகளை வீணாக வளர்க்காமல், வார்த்தைகளை சிக்கனமாகக் கையாண்டு, விறுவிறுப்பாக எழுதியுள்ளார். பரிசு பெற்ற கதைகளும் பாராட்டுப் பெற்ற கதைகளும் நிறைய உள்ளன.
நன்றி: தினத்தந்தி, 3/1/2018.