இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், ஆலடி அருணா, விகடன் பிரசுரம், பக்.400, விலை ரூ.250.

23 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் கூட்டாட்சி பற்றியும் எழுதப்பட்ட இந்நூல், இன்றைய அரசியல் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள உதவுவதாக இருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிர்வாகம், நிதி, நீதி, மொழிக் கொள்கை உட்பட பலவிஷயங்களில் எவ்வாறு மத்திய அரசின் அதிகாரத்தை வலுப்படுத்தும் பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதை நூல் விளக்குகிறது.

மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். தன்னிடம் உள்ளநிர்வாகத்தை நேரடியாக அல்லது தமக்குக் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுத்துவார். ஆளுநர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடுக்க அதற்கு எந்த அதிகாரமும் இல்லை' என்று ஆளுநரின் அதிகாரம் பற்றி நூல் குறிப்பிடுகிறது.

மாநிலங்களின் அடிப்படைத் தேவைகளை, மத்திய அரசின் தயவின்றி, நிறைவேற்றிடும் நிதி ஆதாரங்களைப் பெற்றதாக மாநிலங்கள் அமைய வேண்டும். நிதி ஆதாரங்கள் இல்லாத சுயாட்சி, நீரில் பூத்த நெருப்பு என்று மாநில அரசுகள் பொருளாதாரத்தில் சுயசார்பு உள்ளவையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

உச்சநீதி மன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதில் மாநில அரசுக்கு எந்தவித உரிமையும் அளிக்கப்படவில்லை… மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் ஏற்படும் தகராறுகளைத் தீர்க்க சுதந்திரமான நீதித்துறை தேவை என நீதித்துறை சுயமாக இயங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறுகிறது.

கூட்டாட்சி முறையில் மாநில அரசுகளும் உரிமை பெற்றவையாக இருக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறும் நூல்.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026607.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

நன்றி: தினமணி, 16/4/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *