கவலையே வேண்டாம்
கவலையே வேண்டாம், என்.வி.சுப்பராமன், யுனிக் மீடியா இன் டெக்ரேட்டர்ஸ், பக். 152, விலை 120ரூ.
வேகமான இந்த உலகில் ஏராளமான கடமைகளுக்குள் சிக்கித் தவிப்பதாயிருக்கிறது வாழ்க்கை. இதன் இடையே இல்லம், மனைவி, மக்கள் என்ற இல்லறக் கடமையும் நடக்கிறது. தேவைகளும், உளைச்சல்களும் நெருக்குகின்றன. ஒவ்வொருவருக்கும் தானே தன்வசம் இல்லாத தருணங்கள் பல. ஆயுள் இழப்பு முதல் பொருள் மற்றும் பண இழப்பு குடும்பப் பொருளாதாரத்தைத் தாக்கி விடுகிறது. இழப்புக்கு ஈடு பெறுதலே காப்பீடு.
ஒருவரது ஆயுள் காப்பீட்டின் பயனாளி அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினரே என்பதை விளக்குவதில் துவங்கி, காப்பீட்டுத் தத்துவத்தையும், காப்பீட்டு வகைகளையும் பல்வேறு அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன.
1818இல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் மேல்தட்டு மக்களுக்காகக் கால்வைத்த ஆயுள் காப்பீடு, காலப்போக்கில் விரிந்து பரந்து சாமானியர்களை அடைந்த காப்பீடு வரலாறும், இந்தியர்களுக்கான காப்பீடு வசதிக்காக ராஜாராம் மோகன்ராய் முதல் போராடிய பல்லோரின் அர்ப்பணிப்பையும் நுாலில் காணலாம். உயிர்க்காப்பீடு, பொதுக்காப்பீடு, உடல்நலக் காப்பீடு வழங்கும் நிறுவனங்களின் பட்டியலும் நுாலில் உண்டு.
காப்பீட்டுக்குப் பின்பான சேவை முறைகள் போன்றவற்றிற்கும் சுருக்கமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. பொது அறிவு நோக்கில் படிக்கலாம்.
நன்றி: தினமலர், 11/3/2018,
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026795.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818