அவரும் நானும்
அவரும் நானும், துர்கா ஸ்டாலின், உயிர்மை பதிப்பகம், விலை800ரூ.
ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். அதேபோன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு பின்னால் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருப்பதை இந்த நூல் ஊர்ஜிதப்படுத்துகிறது.
மனைவி சிறப்பாக இருந்தால் வீடு சிறப்பு பெறும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்து வரும் நூலாசிரியரின் மறக்க முடியாத மனப்பதிவுகளை அபூர்வ புகைப்படங்களுடன் இந்த நூல் சித்தரிக்கிறது. ஒரு அரசியல் குடும்பம் எதிர்கொள்ளக் கூடிய நெருக்கடிகள், சவால்கள், சோதனையான காலகட்டங்களுடன் மனதுக்கு இனிமையான பல நினைவுகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் மு.க.ஸ்டாலின் பன்முகத்தன்மை கெண்ட பரிமாணங்கள், செயல் திறமை அனைவரையும் அரவணைக்கும் பண்பு போன்றவற்றை வெகுநேர்த்தியாக இந்த நூல் எடுத்துக்கூறுகிறது. யாரும் அறிந்திராத புதிய செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
மு.க.ஸ்டாலினின் தனிப்பெரும் மகத்தான ஆளுமையை வெளிப்படுத்தும் மாபெரும் வரலாற்று ஆவணமாக திகழ்கிறது இந்த நூல். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வராமல் வாழ்வது எப்படி? வாழ்க்கைக்கான இலக்கணம் என்ன? என்று முக.ஸ்டாலின் கூறியவை நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026465.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினத்தந்தி, 7/3/2018.