எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம்
எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம், மேன்மை வெளியீடு, விலை 150ரூ.
தமிழ்த்திரை உலகின், நகைச்சுவை நடிப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கொடிகட்டிப் பறந்தபோது, அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர், காளி என்.ரத்தினம். என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பில் நவீனம் கலந்திருக்கும். காளி என்.ரத்தினத்தின் நகைச்சுவையில் முழுக்க முழுக்க கிராமிய மணம் கமழும்.
“கிராமிய கலையில் அண்ணன் (காளி என்.ரத்தினம்) பெரிய மாஸ்டர்” என்று கலைவாணர் பாராட்டியுள்ளார். நாடகத்திலும், சினிமாவிலும் நடிப்பதற்கு எம்.ஜி.ஆருக்கு பயிற்சி அளித்ததுடன், அத்துறைகளில் அவர் கால் பதிக்க வழிவகுத்தவர் காளி என்.ரத்தினம்தான். அவருடைய சாதனைகளை விவரிக்கிறது இந்த நூல். இதை எழுதிய பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன், காளி என்.ரத்தினத்தின் பேரன் ஆவார்.
சுவையான தகவல்கள் நிறைந்த இப்புத்தகத்தில் பல அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினத்தந்தி, 7/3/2018.