இந்தியாவின் இருண்ட காலம்
இந்தியாவின் இருண்ட காலம், சசி தரூர், கிழக்கு பதிப்பகம், விலை 350ரூ.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் நன்மைகளை பாராட்டும் நூல்கள் பல இருக்கின்றன. ஆனால் காலனி ஆதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும், இந்தத் தேசத்தை எப்படி பின்னோக்கி இழுத்துச் சென்றது என்பதையும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூல் நம்முடைய கடந்த காலம் குறித்த பிழையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கிய ஆவணமாகவே இருக்கிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை உள்பட பல கொடூர சம்பவங்கள் பற்றிய விவரங்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.
முன்னாள் ஐ.நா. துணை பொதுச்செயலாளர், முன்னாள் மத்திய மந்திரி மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் (திருவனந்தபுரம் தொகுதி) சசி தரூர் இந்த நூலை எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் வெளிவந்து மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றிருக்கும் An Era of Darkness நூலின் அதிகாரபூர்வ தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வழங்கி உள்ளது. ஜே.கே.இராஜசேகரன் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/Indiavin_Irunda_Kaalam.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினத்தந்தி 7/3/2018.