சிந்தித்த வேளையில்…
சிந்தித்த வேளையில்…, சி.சைலேந்திரபாபு, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.232, விலை ரூ.200.
மனம், மாணவர், இளைஞர், பெற்றோர், அறிவியல், ஆசிரியர், வாழ்க்கை, போராட்டம், கல்வி, விளையாட்டு, பொது ஆகிய 11 பிரிவுகளில், மண்ணில் எவ்வாறு நல்லவிதமாக வாழ வேண்டும் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது.
ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இவற்றையெல்லாம் இனிமேல் கடைப்பிடிப்பேன் என சபதம் செய்து கொள்பவர்களில் எத்தனை பேர் தொடர்ந்து அவற்றைக் கடைப்பிடிக்க முடிகிறது? தொடர்ந்து கடைப்பிடிக்க எப்படித் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்? என்பது நூலின் முதல் பிரிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பிரிவில், மாணவர்கள் படிப்பைத் தேர்ந்தெடுப்பதன் அவசியம், தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம், மாணவர்கள் உடல் நலனை எவ்வாறு பேண வேண்டும் என மாணவர்களுக்குத் தேவையான பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
போராட்டம் பிரிவில் எல்லாப் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டுமா? போராட்டம் எந்த அளவுக்குத் தேவை? தொழிலாளர்களின் போராட்டங்களால் ஏற்படும் விளைவுகள் எவை? தொழிலை நடத்துபவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் போராட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்துகின்றன. உடல் நலத்தைப் பேண வேண்டியதன் அவசியம் நூல் முழுக்க வலியுறுத்தப்படுகிறது. இந்நூல் முழுவதும் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் அனுபவம் சார்ந்ததாகவும், நடைமுறையில் செயல்படுத்தும் விதமாகவும் உள்ளன. நல்ல வாழ்க்கை வாழ வழிகாட்டும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 28/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818