அவள்

அவள் – பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், விலை 90ரூ.

பெண்ணியப் பார்வை

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் எழுதியுள்ள இந்நூல் உரையாடலுக்கான நூலாகும். பல்வேறு சமயங்களில் உள்ள பெண்களைச் சிறுமைப்படுத்தும் போதனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

நபிகள் காலத்தில் பெண்களுக்கு அரசியல் முதல் ஆன்மீகம் வரையில் சமத்துவ உரிமைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நிகழ்ந்துள்ள மாற்றம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என்று ஒப்புக்கொள்கிறார் நூலாசிரியர்.

பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் கட்டுப்பாடுகள் என்ற வாதத்தை எதிரொலிக்கும் இப்புத்தகம், பெண்ணை ஆணின் உடைமைப் பொருளாக்கிய வரலாற்றுக் கட்டத்திற்குள் பயணிக்கவில்லை. பாலின சமத்துவத்துக்காகக் களம் கண்ட இயக்கங்கள் பற்றிய பகுதி முக்கியமானது. ஆனால், பெண்ணியவாதிகளின் பரப்புரைகள் பற்றிய ஒரு தரப்பான விமர்சனங்களே முன்வைக்கப்பட்டுள்ளன.

உடலுறவு சார்ந்தே கட்டமைக்கப்பட்டுள்ள கோட்பாடுகளையே டாக்டரும் எதிரொலிக்கிறார். தற்பாலின ஈர்ப்பு பற்றிய புரிதலும் அவ்வாறே. விரிவான விவாதத்திற்கான ஒரு கருப்பொருளை, ஒற்றைப் பத்தியில் சொல்வது, பழைய கட்டமைப்பு குலைந்து விடுமோ என்ற மிகை அச்சத்திலிருந்து வருகிறது.

ஆயினும் இத்தகைய ஆரோக்கியமான வாதங்களுக்கு இட்டுச் செல்கிற வகையில் மட்டுமல்லாமல், “சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் ஓர் இனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒடுக்கிவைத்துவிட்டு ஒரு சமூகம் முன்னேற முடியாது” என முடித்திருக்கிற வகையிலும் இந்தப் புத்தகம் வாசிக்கப்பட வேண்டியது.

நன்றி: அந்திமழை, ஜுன் 2018.

 

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026925.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.