அவள் பெண்ணியப் பார்வையில்

அவள் பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. பெண்ணியம் குறித்த விவாதங்களும், கருத்துகளும் உலக அளவில் இன்று ஒரு பேசு பொருள் ஆகிவிட்டது. இந்த நூலில் பெண்கள் தொடர்பான எல்லாப் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் இஸ்லாமிய பேச்சாளரும், எழுத்தாளருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் அலசி ஆராய்ந்துள்ளார். பெண்கள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை அழகிய தமிழில் எளிய முறையில் எடுத்துக்கூறுகிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

அவள்

அவள் – பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், விலை 90ரூ. பெண்ணியப் பார்வை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் எழுதியுள்ள இந்நூல் உரையாடலுக்கான நூலாகும். பல்வேறு சமயங்களில் உள்ள பெண்களைச் சிறுமைப்படுத்தும் போதனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நபிகள் காலத்தில் பெண்களுக்கு அரசியல் முதல் ஆன்மீகம் வரையில் சமத்துவ உரிமைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நிகழ்ந்துள்ள மாற்றம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என்று ஒப்புக்கொள்கிறார் நூலாசிரியர். பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் கட்டுப்பாடுகள் என்ற வாதத்தை எதிரொலிக்கும் […]

Read more

இஸ்லாம் ஒரு பார்வை

இஸ்லாம் ஒரு பார்வை, டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, கிழக்குப் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. மனிதன் சீரிய ஒழுக்கத்துடனும், நெறிகளுடனும், பண்புகளுடனும், அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அன்று உருவானதுதான் மதங்கள். ஆனால், இன்று உலகில் நடக்கும் சில தீங்குகளுக்கு இந்த மதங்களும் ஒரு காரணம் என்ற விபரீதமான கருத்து சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த விமர்சனத்திற்கு இஸ்லாம் தற்போது பலிகடாவாகி உள்ளது. பன்முகத் தன்மையும், மதச்சார்பற்ற கொள்கையும் கொண்டு உலகின் சிறப்புக்குரிய நாடாக விளங்கும் இந்தியாவில், […]

Read more