ஸ்ரீராஜ மாதங்கி
ஸ்ரீராஜ மாதங்கி, டி.எஸ்.கிருஷ்ணன், ஸ்வார்த்தம் சத் சங்கம், பக். 320.
தென் நாட்டில் முளைத்தெழுந்த மூலவித்து மூல லிங்கமாம் சோமசுந்தரர், அன்னை மீனாட்சி சக்தியின் இதய பாகம் எழுந்தருளிய கடம்பவனமாம் மாமதுரையின் வரலாறும், இத்தலத்தின் வரலாற்றுப் புதினங்களும் பல நிலைகளில் கிடைத்தாலும், அவை வைர மாலையாக, வரலாற்றுப் பெட்டகமாக, ‘ஸ்ரீ ராஜ மாதங்கி’ அமைந்திருக்கிறது.
மதுரை மீனாட்சி கோவில் கட்டமைப்பு உணர்த்தும் தத்துவங்கள், இசை பாடும் துாண்கள், ஓவியங்கள் உணர்த்தும் வரலாறு, திருவிழாக்கள், தமிழ் சங்க வேந்தர்கள் பற்றி ஒவ்வொரு அடியாக நமக்கு விளக்கும் எளிய இனிய தமிழ் நடை, சுகம் தரும் சுகந்தம். இந்நுால் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது என்று கூறலாம்.
– எஸ்.கணபதி
நன்றி: தினமலர், 8/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818