களவும் கற்று மற
களவும் கற்று மற, எஸ்.விஜயன், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 75ரூ.
சிறுவர் – சிறுமியரின் ரசனைக்கு இயன்றதொரு விருந்தை படைக்கிறது இந்நுால். திசை மாறிய இளைஞனின் தறிகெட்ட சிந்தனையுடனான சாத்வீக பயணத்தை மேற்கொள்கிறது.
கதை நெடுக இளைஞனை ஆக்கிரமித்து வரும் கவிதைகளின் பின்னணி பற்றி, இந்நுாலின் இறுதியில் சிறிய குறிப்பைத் தந்துள்ளார் ஆசிரியர்.
அந்த குறிப்பும், இந்நுாலின் தலைப்புமே, அழகிய வண்ணப்படங்களோடு சிறார்கள் ஐக்கியமாகிட உதவும் திறவுகோல்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நன்றி: தினமலர், 7/10/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818