மஹத்
மஹத், முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்ப்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ.
எழுச்சியின் தொடக்கம்
மனித உரிமைச் செயல்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான ஆனந்த் டெல்டும்ப்டே சமீபத்தில் எழுதி பெரும் கவனத்தைப் பெற்ற நூலின் மொழியாக்கம். தலித் இயக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படும் 1927-ம் ஆண்டு மஹத் மாநாடுகளை, அதற்கு முன்பு நடந்த உரிமைப் போராட்டங்கள், உலகளவிலான எழுச்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கும் பகுத்தாய்வு. ஆவணக் காப்பகத் தரவுகள், இதுவரை மராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படாத புத்தகங்கள் என்று மஹத் உரிமைப் போராட்டத்தின் முழுமையான சித்தரிப்பு.
நன்றி: தி இந்து, 2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818