ஊடகவியல்
ஊடகவியல், துரை. மணிகண்டன், கமலினி பதிப்பகம், பக். 240, விலை 150ரூ.

சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை அறிவதற்கும், அதற்கேற்ப செயல்பாடுகளை உருவாக்கிக் கொள்ளவும், பிறருடன் கலந்துரையாடவும், இவ்வாறு பலவகையிலும் நமக்கு உதவுவது ஊடகங்களாகும், இதைப் பற்றிய விரிவான தகவல்களை நமக்கு இந்நுால் எடுத்துரைக்கிறது. இந்நுாலில், ஊடகம் குறித்த விளக்கங்களும் சிறப்பாக உள்ளன.
வானொலி குறித்தும், தொலைக்காட்சி குறித்தும் அடுத்த பகுதி விரிவாக விவரிக்கிறது. கணினி, இணையம் குறித்த தகவல்களை நான்காம் பகுதி விளக்குகிறது.
இதில் இணைய இதழ்கள், அலைபேசி, குறுஞ்செயலி எனப் பல தகவல்களை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஊடகப் பணியாளர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் காணலாம்.
ஊடகங்களைப் பற்றிய தேவையான பல செய்திகளைப் பொதிந்து வைத்துள்ள இந்நுால், இத்துறையைப் பற்றி அறிய விரும்புவோருக்கும், இப்பணியில் ஈடுபட விழைவோருக்கும் பயனுடையதாகவும், வழிகாட்டியாகவும் அமைந்து சிறக்கிறது.
– முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்
நன்றி: தினமலர், 16/12/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027641.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818