வாழ்க்கை ஜெயிப்பதற்கே..!
வாழ்க்கை ஜெயிப்பதற்கே..!, ஞானசேகர்; யூனிக் மீடியா, பக்.198, விலை ரூ.160.
வாழ்க்கை சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்வதற்கு பல எளிய வழிகள் உள்ளன என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிந்து முன்னேற வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த கட்டுரையாளர் மிக நேர்த்தியாக பல கருத்துள்ள உண்மை சம்பவங்களையும், கதைகளையும் மிகச் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
இந்நூலில் உள்ள 36 கட்டுரைகளும் தூதன் மாத இதழில் 3 ஆண்டுகள் வெளிவந்ததன் தொகுப்பாகும். இளைய சமுதாயத்தினரை சிந்திக்க வைக்கவும், தோல்விகளைக் காணும்போதெல்லாம் துவண்டுவிடாமல், புதிய உத்வேகத்துடன் அதை சவாலாக ஏற்று முன்னேறுவதற்கு வகுத்துக் கொள்ள வேண்டியபாதைகளையும் ஆசிரியர் அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
வாழ்க்கைப் போராட்டத்தில் அமைதி, அறிவு, அன்பு ஆகியவற்றை இழந்தாலும் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்; எதையும் சாதிக்க முடியும் என்பதையும், நேர்மையும், உண்மையும் கொண்டவர்கள் இன்றைய சமுதாயத்தில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவர்களின் தன்னம்பிக்கைதான் என்ற கருத்தையும் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது இந்நூல். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனைவரும் அவசியம்
நன்றி: தினமணி, 4/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818