நகைச்சுவை குதிரையில் என் சிந்தனைப் பயணம்
நகைச்சுவை குதிரையில் என் சிந்தனைப் பயணம், திண்டுக்கல் ஐ. லியோனி, அசசி பதிப்பகம், பக். 204, விலை 180ரூ.
வாழ்வியல் குறித்த சிந்தனைகள்: பட்டிமன்றங்களில் நகைச்சுவையால் பலரையும் ஈர்த்து வரும் லியோனி எழுதிய, கட்டுரைகள் அடங்கிய இந்நுால் அவரது முதல் நுால்.
பல எடுத்துக்காட்டுகள், வழித் தீட்டப்பட்ட கட்டுரைகள் படிப்போருக்கு நல்ல விருந்து. பேச்சுக் கலை பற்றிக் குறிப்பிடும்போது, ‘நல்லதைப் பேசுவோம்; நன்றாகப் பேசுவோம்’ என்ற அடிப்படையில் எழுந்த அக்கட்டுரை, சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு ஒருவர் பேச வேண்டும் என்பதைப் பல உதாரணங்களோடு விளக்குகிறது.
‘குழந்தை வளர்ப்புக் கலை’ என்ற கட்டுரையில், பெற்றோர் கவனத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற கருத்துக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார்.
வாழ்க்கையை மேம்படுத்த நல்ல திரை இசைப் பாடல்கள் நெஞ்சில் நிலைக்குமானால், அவை நாளைய வாழ்விற்குரிய நம்பிக்கை விதையாகும் என்ற கருத்தில் அமைந்த இறுதிக் கட்டுரை சிறப்பாக உள்ளது. எளிமையாக எழுதப்பட்ட இந்நுால் பாராட்டுக்குரியது.
– ராம. குருநாதன்
நன்றி: தினமலர், 7/4/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818