சேப்பியன்ஸ்
சேப்பியன்ஸ், யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சு சண்முகம், மஞ்சுள் ப்பளிஷிங் அவுஸ், பக். 499, விலை 499ரூ.
பிரபஞ்சத்தோற்றம், பூமி உருவாதல், உயிரினங்களின் தோற்றம் என 1,350 கோடி ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை விளக்கி வியக்க வைக்கிறது இந்த நூல். கோடானு கோடி உயிர் இனங்களில் ஒன்றாகவும், அரை குறை ஆடையுடனும், பரட்டைத் தலையுடனும், காய் கனிகளைப் பொறுக்கிக்கொண்டும், எதிர்ப்பட்ட விலங்குகளை வேட்டையாடி, திரிந்து கொண்டிருந்த மனித இனம், படிப்படியாக மாறி, இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற ஓர் இனமாக மாறி உள்ளது. இப்படிப்பட்ட சுவையான தகவல்களை இந்த நூல் தருகிறது.
செழிப்பான நவீனச் சமூதாயங்களில் உள்ள மக்கள், இவ்வளவு செழிப்பு இருந்தும்கூட தனிமை உணர்வால் பெரிதும் துன்புறுகின்றனர். ஆனால் அவ்வளவாக வசதி இல்லாத நம்முடைய மூதாதையர், சமூகத்திலும் மதத்திலும் இறையுடனான ஒரு பிணைப்பிலும் அதிக மன நிறைவைப் பெற்றனர் (பக். 488).
பல கோடி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரபஞ்சத்தைப் பற்றி அறிந்து கொள்ள, இந்த மொழிபெயர்ப்பு நூல் துணை செய்யும் என்பதில் ஐயம் இல்லை.
நன்றி: தினமலர், 5/5/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/10000000271
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818