இணைந்த மனம்
இணைந்த மனம், மிருதுலா கர்க், தமிழில்: க்ருஷாங்கினி, வெளியீடு: சாகித்ய அகாடமி, விலை: ரூ.395
மூன்று பெண்களின் கதை சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்தி, ஆங்கில எழுத்தாளர் மிருதுலா கர்க், இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றி இந்தியில் எழுதிய ‘மிலிஜூல் மன்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர், சிறுகதையாளர் க்ருஷாங்கினி இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார்.
1950-களில் பிறந்த குல்மோஹர், மோக்ரா ஆகிய சகோதரிகளையும் அவர்களது தோழியையும் சுற்றி நடக்கும் கதை இது. மாறும் காலத்தோடு மாறும் மக்களின் மனநிலைகளும் மாறுவதைச் சித்தரிக்கும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு ‘இணைந்த மனம்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏகதேசமாக மக்கள் கனவு கண்ட சுதந்திரம் கிடைத்த பிறகும் சந்தோஷம் நிலவவில்லை. தேசப் பிரிவினையுடன் வந்த துயர நிஜத்தை, சுதந்திரம் என்ற கனவின் நிறைவால் எதிர்கொள்ளவே முடியவில்லையென்ற எதார்த்தத்தைப் பேசும் நாவல் இது.
நன்றி: தமிழ் இந்து, 15/6/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818