தெய்வத்தின் குரலமுதம்
தெய்வத்தின் குரலமுதம், ஆர். பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ.
கண்கண்ட தெய்வமாக இருந்து ஏராளமான ஆன்மிக சாதனைகளைச் செய்தவர் என்று காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி சுவாமிகளை பக்தர்கள் போற்றிப் பாராட்டுவது மிகச் சரியான கருத்து என்பதை, இந்த நூலைப் படிக்கும் போது உணரமுடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரிச்சினைகள் பற்றி காஞ்சிப் பெரியவர் வழங்கிய அமுத மொழிகளை அவரது சரளமான பேச்சு நடையிலேயே தொகுத்துத் தந்து இருப்பதால், அவரே நம் முன் அமர்ந்து உரையாற்றுவது போன்ற அனுபவம் ஏற்படுகிறது.
மோர் விற்கும் ஏழைக் கிழவி, தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்ட போது வழங்கிய சிறிய கல்லின் சிறப்பு, தீபாவளி, வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, சனிப்பிரதோஷம் போன்ற ஆன்மிக நிகழ்வுகள் பற்றிய சிறந்த கருத்து உள்பட 62 தலைப்புகளில் காஞ்சிப் பெரியவர் வழங்கிய உள்ளத்தைத் தொடும் உரைகள் அனைத்து இந்து மத பக்தர்களையும் கவரும் வண்ணம் உள்ளன.
நன்றி: தினத்தந்தி
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818