சைவத் தமிழ்
சைவத் தமிழ், தொகுப்பு பேராசிரியர் சண்முகசுந்தரம், காவ்யா, விலை 900ரூ.
சைவ சித்தாந்தத்தின் சிறப்பு, அதன் வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்த தமிழ் அறிஞர் அவ்வை துரைசாமிப் பிள்ளை எழுதிய நான்கு நூல்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. தமிழ்ச் செல்வம், சைவ இலக்கிய வரலாறு, அவ்வைத் தமிழ், தமிழ்த் தாமரை ஆகிய தலைப்புகளில் அவ்வை துரைசாமிப் பிள்ளை ஆகிய நூல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் சைவத் தமிழ்த் தொண்டாற்றிய பல பெருமகனார்களைப் பற்றிய அரிய செய்திகளை இந்த நூல் தாங்கி இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் கொடுக்கப்பட்டு இருக்கும் மேற்கோள்கள், அவ்வை துரைசாமிப்பிள்ளை எவ்வளவு அதிக அளவிலான நூல்களை கற்றுத் தேர்ந்தவர் என்பதை வெளிக்காட்டுகிறது.
தமிழ் ஆர்வலர்களுக்கும் சைவ சமய வரலாற்றை முழுமையாக அறிய விரும்பும் ஆய்வாளர்களும் இந்த நூல் பேருதவியாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 10/4/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818