ராதிகா சாந்தவனம்
ராதிகா சாந்தவனம், முத்து பழனி, காவ்யா, விலை 270ரூ.
17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரான பிரதாப சிம்மனின் அரசவையில் நடனக் கணிகையாக தேவதாசியாக இருந்த முத்து பழனி என்ற பெண், தெலுங்கு மொழியில் படைத்த இந்த நூல், காமம் கொப்பளிக்கும் காதல் இலக்கியமாகப் போற்றப்படுவது ஏன் என்பதை, இந்த நூலில் காணப்படும் உணர்ச்சிகரமான பாடல்களைப் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது.
584 பாடல்களைக் கொண்ட இந்த நூல், முதலில் 1887ல் ஆங்கிலேயர் ஒருவரால் பதிப்பிக்கப்பட்டது. சிற்றின்பங்களை மையமாகக் கொண்டு இருந்ததால் தடை செய்யப்பட்ட இந்த நூல், பின்னர் தடை விலக்கப்பட்டு வெளியானது. ராதா மற்றும் இலா ஆகிய 2 பெண் கதாபாத்திரங்கள் வழியாக பெண்ணின் காமம் குறித்த விருப்பங்களையும் புரிதல்களையும் முத்து பழனி, 17-ம் நூற்றாண்டிலேயே துணிச்சலுடன் பதிவு செய்து இருப்பது வியப்பளிக்கிறது. தெலுங்கில் எழுதப்பட்டு இருந்தாலும் தமிழ் இலக்கியத் தன்மை கொண்ட இந்த நூலை, ஆசிரியர் தி.உமாதேவி விரசம் தொனிக்காமல் தமிழில் மொழியாக்கம் செய்து இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி, 10/7/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818