குறள் விருந்து கதை விருந்து
குறள் விருந்து கதை விருந்து, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.200.
திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. திருக்குறளைப் படிக்கும் அனைவரின் மனதிலும் அது பதிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மருந்தின் கசப்பை நாக்கு ஏற்றுக் கொள்ள தேனைக் கலப்பது போல், நல்ல கருத்துகளை விதைக்க தேனான கதைகள் அவசியம் என நினைத்த நூலாசிரியர், திருக்குறளை ஒரு கதையுரையில் தந்தால் அது சிறக்கும் என்பதால், ஒரு குறளுக்கு ஒரு கதையை எழுதி விளக்கியிருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 108 திருக்குறள்களுக்கு 108 கதைகளை எழுதித் தொகுத்துத் தந்திருக்கிறார். ஒரு குறளுக்கு ஒரு கதை என்று எழுதப்பட்டிருக்கும் இந்நூலில், கதையின் இறுதியில் குறள் தரப்பட்டுள்ளது. இறுதியாக இரண்டு வரிகளில் சுருக்கமாக அந்தக் குறள் விளக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு விளக்கப்பட்டுள்ள இரு வரிகளும் இன்னொரு குறள் போல அமைந்திருப்பது சிறப்பு.
“குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்” என்ற குறளை விளக்கும் வகையில் நூலாசிரியர், “மனிதனில் குறை தேடல் வீண் செயல்; மனிதனில் நிறை தேடலே நன்செயல்!” எழுதியிருப்பதை உதாரணமாகச் சொல்லலாம்.
குறளுக்கொரு கதை; குறளுக்கொரு குறள் என்பதாக மிளிர்கிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 6/1/2020
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818