இலக்கியத்தில் தேவதாசிகள்
இலக்கியத்தில் தேவதாசிகள், முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை ரூ.165.
சிவன் தனது தலை முடியில் உள்ள ஆதிசேடனை நடனமாட சொன்னபோது ஆதிசேடன் தலையிலிருந்து வந்த ஐந்து பேரில் முதலில் வந்தவர்கள் தாசிகள் என்ற தகவலைத் தரும் இந்த நூல் தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இருந்த கணிகையர், நீதிநூல் காலத்து விரைவிலன் மகளிர், நாயக்கர் காலத்து ஆடல் மகளிர் ஆகியோரின் ஒன்றுபட்ட இனம்தான் தேவதாசிகளாக உருமாற்றம் பெற்றன என்ற வரலாற்றுச் செய்தியையும் பதிவு செய்திருக்கிறது.
பக்தி இலக்கியங்களிலும் திரை தமிழிலும் தேவதாசிகள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறார்கள் என்பதோடு திருப்புகழைப் பாடிய அருணகிரி நாதர், தாசிகளால் பாதிக்கப்பட்டது எப்படி என்ற தகவல்களையும் இந்த நூல் தருகிறது.
நன்றி: தினத்தந்தி, 27/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818