போகரின் சப்தகாண்டம் 7000
போகரின் சப்தகாண்டம் 7000, பதிப்பாசிரியர் சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், முதல்பாகம் விலை 500ரூ, இரண்டாம் பாகம் விலை 400ரூ.
அமானுஷ்மான சக்திகள் கொண்டவர்கள் என்று பலராலும் நம்பப்படும் சித்தர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே வியப்பானவை என்றாலும், சித்தர் போகர் எழுதியதாகக் கூறப்படும் இந்த நூலில் உள்ள தகவல்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றன.
சிவபெருமாள் உமைக்கு அருளிய 7 லட்சம் பாடல்களான ஞானவிளக்கத்தை உமையிடம் இருந்து நந்தியும், நந்தியிடம் இருந்து திருமூலரும், திருமூலரிடம் இருந்து காலாங்கி சித்தரும் அவரிடம் இருந்து போகர் பெற்றதாகவும், சித்தர் போகர் பொதுமக்கள் வசதிக்காக இவற்றை 7 ஆயிரம் பாடல்களாகச் சுருக்கி எழுதியதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பாடல்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சில விசேஷ குளிகைகளை சாப்பிட்டு, அந்த சக்தி மூலம் சீனா உள்பட பல இடங்களுக்குச் சென்று வந்ததாக இதில் போகர் தெரிவித்து இருக்கிறார். பல்வேறு அதிசய சக்திகளை வழங்கும் குளிகைகளை எவ்வாறுஉற்பத்தி செய்வது, மாலையில் இருந்து குதிக்க பாராசூட் போன்ற குடை, கடலில் செல்ல நீராவிக் கப்பல், வானததில் பறந்து செல்ல விமானம் ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது ஆகிய விவரங்களையும் போகர் இந்த நூலில், பாடல்கள் வடிவில் தந்து இருக்கிறார்.
வியப்பான தகவல்களைத் தரும் அதே சமயம், சித்தர்கள் பற்றிய செய்திகள் அறிவியல் பூர்வ ஆய்வுக்கு உட்பட்டவை அல்ல என்று நூலின் தொகுப்பு ஆசிரியர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினத்தந்தி, 25/12/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818