தொல்காப்பியம்
தொல்காப்பியம், புலியூர்க்கேசிகன், ஜீவா பதிப்பகம், விலை 400ரூ.
உலக மொழிகளின் இலக்கண வரம்பினை உறுதிப்படுத்தும் நூல்கள் அனைத்துக்கும் முற்பட்டது என்று போற்றப்படும் தொல்காப்பியத்திற்கு எளிய விளக்க உரையாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. நச்சினார்க்கினியர், இளம்பூரணனார் ஆகியோரின் உரைகளைத் தழுவி இந்த விளக்க உரை எழுதப்பட்டு இருக்கின்றது என்ற போதிலும், தொல்காப்பியம் முழுவதையும் புரிந்து கொள்ளத் தக்க வகையில் சுருக்கமான வரிகளைக் கொடுத்து இருப்பதன் மூலம் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது. தொல்காப்பியத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் விளக்க உரையுடன் எடுத்துக்காட்டுகள் கொடுத்து இருப்பதால் படிக்க எளிமையாக இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 25/12/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818