சங்கமி பெண்ணிய உரையாடல்கள்
சங்கமி பெண்ணிய உரையாடல்கள், ஊடறு றஞ்சி, புதிய மாதவி, காவ்யா வெளியீடு, விலை 400ரூ.
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பிரபலமான பல பெண்களின் நேர்காணல் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஊடறு என்ற அமைப்பைச் சேர்ந்த றஞ்சி, இந்தியாவைச் சேர்ந்த புதிய மாதவி ஆகியோரால் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பெண்கள் தாங்கள் எதிர்நோக்கி இருக்கும் சவால்களையும் மனக்குமுறல்களையும் இந்த நேர்காணல்களில் அப்பட்டமாகக் கொட்டி இருக்கிறார்கள். பெண்களை நுகர்வுப் பொருளாகச் சித்தரிக்கும் ஆண்கள், ஓரினச் சேர்க்கை, பெண்களின் மது அருந்தும் பழக்கம், திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது, மாதவிடாய் காலங்கள், திருநங்கைகள் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவை இந்த நேர்காணல்களில் ஆழமாக அலசப்பட்டு இருக்கின்றன.
நடிகை குஷ்பு, குட்டி ரேவதி ஆகியோர் வெளியிட்ட கருதுக்களுக்கு எதிராக எழுந்த விமர்சனம் பற்றியும் இதில் பேசப்பட்டு இருக்கிறது. நோபல் பரிசு பெற்றவரும், கென்யா நாட்டைச் சேர்ந்தவருமான வங்காரி மாத்தா, தமிழகத்தின் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி, ஈழப் போரில் பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர்கள், கவிதாயினிகள், மொழி, இனம், தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்த பெண் பிரபலங்கள் ஆகியோர் பட்டவர்த்தனமாகத் தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்து இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 25/12/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818