மணற்கேணி
மணற்கேணி, எச்.நாராயணசாமி(நானா), வானவில் புத்தக்களஞ்சியம், விலை 306ரூ.
வித்தியாசமான அம்சங்களுடனும், மற்ற நூல்களில் இருந்து வேறுபட்டும் தயாராகியுள்ள இந்த நூல், பல விதமான மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோரணம் போலக் காட்சி அளிக்கிறது. நூலாசிரியர் தான் கற்றரிந்த, தனது அனுபவத்தில் கிடைத்த மற்றும் தான் படித்த, பார்த்த பயனுள்ள தகவல்களைக் கேள்வி பதில் வடிவில் தந்து இருப்பது புதிய முயற்சி.
வரலாறு, அறிவியல், காதல், காமம், முதுமை, தத்துவம், உளவியல், பத்திரிகை, மனதைத் தொட்ட பாடல்கள் போன்ற பல விஷயங்களை சுவைபடத் தொகுத்துத் தந்து இருக்கிறார்.
தமிழை செம்மொழியாக முதன் முதலில் மொழிந்தவர் சென்னை கலெக்டராக இருந்த எல்லிஸ் துரை என்ற வியப்பான தகவலையும் தந்து இருக்கிறார். விக்கிரமாதித்ன், கிளியோபாட்ரா, அலெக்சாண்டர், சாணக்கியர், சாக்ரட்டீஸ் போன்றவர்கள் பற்றியும், பாரதியார், கண்ணதாசன், வைரமுத்து போன்ற ஆளுமைகள் குறித்தும் பல தகவல்களைக் கொடுத்து இருக்கிறார்.
நேதாஜி மரணம், நந்தனார் சரித்திரம், லெமூரியா கண்டம் ஆகியவை உண்மையா என்பவற்றுக்கான பதிலையும் ஆசிரியர் தந்து இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி, 25/12/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818